Thursday, 8 March 2012

உணவு பாதுகாப்பு தர கட்டுபாடு சட்டம் – தமிழகத்தில் ஒரு பார்வை


உணவு பாதுகாப்பு தர கட்டுபாடு சட்டம் தமிழகத்தில் ஒரு பார்வை
உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாடு சட்டம் -
உணவு தொடர்பான ஒரே சட்டம்
ஆகஸ்ட் 05,  2011 முதல் அகில இந்திய முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி உணவு ஆய்வாளர்கள் பதவி உணவு பாதுகாப்பு அலுவலர் என மாற்றப்படுகிறது.
அவை சராசரியாக 1000 உணவு நிறுவனங்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில்
கிராமபுரங்களில் 385 நபர்களும் நகரபுரங்களில் 199 நபர்களும்
நியமிக்கப்பட்டுள்ளனர்கள்.
இவரகளுக்கு மேல் மட்ட அளவில் குறிப்பிட்டு நியமன அலுவலர்கள் 32 நபர்கள்
மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
இவர்ரகளுக்கு மேல்
இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது உணவு பாதுகாப்பு ஆணையராக திரு.ராமநாதன் இ.ப.அ பதவி வகிக்கிறார்.
சட்டத்தின் நோக்கம்.
பல்வேறு உணவு சட்டங்கள் அமல்படுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் வணிகர்கள்
இடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய காரணத்தாலும் ஆய்வகங்கள்
காலத்திற்கு ஏற்ப அறிவியல் புரவமாக இல்லாத காரணத்தாலும்.
1994ம் ஆண்டு பிரதமமந்திரியிடம் வணிகம் மற்றும் விவசாய தொடர்புடைய
நிறுவனங்கள் மேற்படி குறைப்பாடுகளை முன் வைத்தன.
இதன் விளைவாக வணிகம், சட்டம், நல்வாழ்வு, நுகரவோர் ,விவசாயம்
ஆகிய துறை நிபுணரகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு நம் நாட்டிலுள்ள உணவு தொடர்புடைய சட்டங்கள் ஆணையங்கள்
மேலை நாட்டு சட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து உணவு பாதுகாப்பு தர கட்டுபாடு 2006 எனற புது சட்டம் கொண்டு வந்தது.
இவை
(1)உற்பத்தியாளர்குள்ள பொறுப்புணர்வு
(2) திரும்ப பெறுதல்
(3)மரபு அணுக்கள் மாற்றமுடைய உணவுகள்
(4) அவசர கால கட்டுபாடு
(5)அபாயகரமான நிலை ஆய்வு மற்றும் தொடர்பு
(6) பாதுகாப்பான உணவு பொருட்கள் நல்லமுறையில் உற்பத்தி செய்தல்
போன்ற சிறப்பான விவசாயங்களை உள்ளடக்கியது.
.

No comments:

Post a Comment